Blog Archive

Thursday, 28 April 2016

வல்லமை தாராயோ!!

வல்லமை தாராயோ!! வல்லமை தாராயோ!!

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ – இந்த
மானிலம் பயனுர வாழ்வதற்கே
வல்லமை தாராயோ – இந்த
மானிலம் பயனுர வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ
இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

Tuesday, 26 April 2016

Matram Ondruthaan Maaraadhadhu


Matram Ondruthaan Maaraadhadhu


"தேடிச் சோறு நிதம் தின்று 

பல சின்னன்சிறு கதைகள் பேசி 

மனம் வாடித் துன்பம் மிக உழன்று 

பிறர் வாடப் பல செயல்கள் செய்து 

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி 

கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் 

பல வேடிக்கை மனிதரைப் போலே 

வீழ்வேன் என நினைத்தாயோ.....!!! " 

- கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.