Blog Archive

Thursday, 5 May 2016

கடவுள் வாழ்த்து!!


கடவுள் வாழ்த்து...

ஆத்தி சூடி,இளம்பிறை அணிந்து;
மோனத்திருக்கும் முழுவென்மேனியன்...
கருநிறம் கொண்டு - பாற்கடல் விசைக் கிடப்போன்...
முகமது நபிக்கு மறையருள் புறிந்தோன்...
இயேசுவின் தந்தை... 
எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது...
பரவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே...
------------------------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து...

கதிர் வெடித்து பிழம்புவிட...
கடல் குதித்து சூடாற்ற...
முதுமை மிகு நிலப்பரப்பில்...
முதல் பிறப்பு தோன்றிவிட...
நதி வருமுன்...மணல் சருமுன்...
பதி மதுரை பெருவழியில்...
பாண்டியர் கை பார்த்தவளே...
நின்னை யான் வணங்குவதும்...
நீ என்னை வாழ்த்துவதும்...
அன்னை மகற்க்கிடையே அழகில்லை என்பதனால்!
உன்னை வளர்த்துவரும் உன்புகழ் சேர்...
தென்புலவர் தம்மை வாழ்த்துகிறேன்...
தமிழ் புலவர் வாழியரோ!!!

No comments:

Post a Comment